என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temples and Miracles"

    • அரங்கநாதப் பெருமாளுக்கு, அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு நாட்களில் வெந்நீர் அபிஷேகம்.
    • நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராஜர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார்.

    நம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு கொண்டவை. அந்த வகையில் சில ஆலயங்களையும், அதில் உள்ள சில அற்புதங்களையும் இங்கே பார்க்கலாம்.


    சோட்டானிக்கரை பகவதி

    ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.


    மதுரை மீனாட்சி

    இந்த கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நடுவில் இருந்து மேற்கு கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னிதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


    தேவிகாபுரம் பொன்மலைநாதர்

    திருவண்ணாமலையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரி அன்று விசேஷ பூஜைகள் உண்டு.


    திருவரங்கம் பெருமாள்

    108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள அரங்கநாதப் பெருமாளுக்கு, அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.


    நல்லம் நடராஜர்

    கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராஜர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகில் இருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.


    ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர்

    விழுப்புரத்தை அடுத்த ரிஷிவந்தியத்தில் உள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

    ×