என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Technical works"
- டெக்ஸ்டைல் ஹேக்கத்தான் (டெக்ஸத்தான் 2023) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- டிசம்பர் 21-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.
திருப்பூர் :
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (டான்சிம்) மற்றும் அடல் இன்குபேஷன் மையம் நிப்ட் - டீ சார்பில், டெக்ஸத்தான் -2023 நிகழ்ச்சி ஜனவரி 6 மற்றும் 7ந்தேதிகளில் திருப்பூரில் நடக்கிறது.
தொழில்துறை சிக்கல்களை தீர்ப்பதற்கும், வணிக மயமாக்கலுக்கு ஏற்ற தொழில்நுட்ப ரீதியாக சாத்தியக்கூறுகளை ஆராயவும், டெக்ஸ்டைல் ஹேக்கத்தான் (டெக்ஸத்தான் 2023) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் மருத்துவ ஜவுளி, தொழில்துறை , ஆட்டோமேஷன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஆடைகள், ஜவுளி கழிவுகளை பயன்படுத்தி மாற்றுப்பொருள் தயாரிப்பது ஆகிய உற்பத்தியில் நிலவும் சவால்களை தொழில்நுட்ப ரீதியாக சமாளிக்கும் புதிய தீர்வுகளை சமர்ப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அடல் இன்குபேஷன் மைய நிர்வாகிகள் கூறியதாவது:-
திறமையான மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வழங்கப்பட்ட தலைப்புகளில் சிக்கல்களுக்கான தீர்வு வழங்கும் தங்களது படைப்புகளை சமர்ப்பிக்கலாம்.
டெக்ஸத்தான் -2023 நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் டிசம்பர் 21-ந்தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு ஜனவரி மாதம் அடல் இன்குபேஷன் மையம் நிப்ட்-டீயில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள், ஆரம்ப மானியம் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் நிப்ட்-டியின் இன்குபேஷன்வசதிகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும், புதிய தொழில் முனைவோர்களும், தங்களின் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 'ஸ்டார்ட்- அப்'கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை உருவாக்கலாம்.மேலும் விவரங்களுக்கு https://www.aicnifttea.org, https://startuptn.in/ என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்