search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Maanila Makkal Munnetra Kazhagam"

    • காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார்.
    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கேட்க உள்ளார்

    திருப்பூர் :

    இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது முத்துகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த முகமது முத்து தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ளார். இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முகமது முத்து, தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வேட்புமனு வாங்கி வந்துள்ளேன், வரும் 27ந் தேதி பாராளுமன்ற வளாகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டுள்ளேன்.

    அதே போன்று ஆந்திர முதல்வரிடமும் ஆதரவு கேட்டுள்ளேன். அதுமட்டுமின்றி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கேட்க உள்ளேன். நான் வெற்றி பெறும் பட்சத்தில் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவேன். கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தமிழகத்தின் பெருமையை நிலைநிறுத்துவேன் என்றார்.

    ×