என் மலர்
நீங்கள் தேடியது "Drought relief Fund"
- அமைச்சர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார்.
- விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில்:
தமிழக உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி திருவேங்கடம் தாலுகா கமிட்டி கடிதம், மற்றும் பல்வேறு கிராமங்களின் விவசாயிகள் சார்பில் இந்த மனுவை அளிக்கிறேன்.
சங்கரன்கோவில் தொகு தியை பொறுத்தவரை விவசாயம் என்பது மிக முக்கிய பிரதான தொழி லாகும். சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. திருவேங்கடம் வட்டம் அ.கரிசல்குளம் பழங்கோட்டை குறுவட்ட விவசாயிகள், நடுவக்குறிச்சி பிர்க்கா மற்றும் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் 2020 - 21, 2021-22-ம் ஆண்டுகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய உரிய உரிமைத் தொகை கட்டியுள்ளனர்.
மேலும் சாகுபடியான பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையும் கட்டப்பட்டுள்ளது. மேற்படி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரண தொகை அறிவிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படாமல் ஒருசில கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி தாலுகாவில் சாகுபடியான பயிர்களை உரிய காலத்தில் மேலாய்வு செய்து அரசு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவான தொகை விவசாய உயர் அதிகாரிகளால் முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரி களை தொடர்பு கொண்டு உடனடியாக கள ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக வழங்க வேண்டிய நிவார ணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.






