என் மலர்
நீங்கள் தேடியது "நேரு நினைவுதினம்"
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் நேரு நினைவுதினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் நேரு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை வடக்கு வீதியில் உள்ள நேரு சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளார் மோகன்ராஜ், ஜேம்ஸ், மாநகர, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாகனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர் சசிகலா, இளைஞர் காங்கிரஸ் மாநகர, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நிர்வாகி இளையபாரத், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சிங்கம், மாநகர காங்கிரஸ் கோட்டத்தலைவர் கதர் வெங்கடேசன், சம்பத், சுரேஷ், மார்க்கெட் செல்வராஜ், அருண்பிரசாத், சிவகுமார், மோகன்தாஸ், மணிவாசகன், துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






