என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறிப்பு. Jewelry"

    திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணி அருகே உள்ள கே.நாட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி நாகநந்தினி (வயது29). 

    இவர் எழுமலை அருகில் உள்ள திருவள்ளுவர் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் திருமங்க லத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செக்கானூரணியில் இருந்து திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள மாவிலிப்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது செல்போன் அழைப்பு வந்தது. எனவே வாகனத்தை மரத்தடியில் நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

     அப்போது 2 வாலிபர்கள் மற்றொரு  இருசக்கர வாகனத்தில் வந்து நாகநந்தினி முன்பு நிறுத்தினர்.  பின்னர் அதிலிருந்து ஒருவர் இறங்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். 

    இதனால் பதட்டம் அடைந்த நாகநந்தினி தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட முயன்றார்.  அவரை  கீழே தள்ளிவிட்டு கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துள்ளான். உடனே நாகநந்தினி செயினை பிடித்து கொண்டார். 

    இதில் 4  கிராம் நகை மட்டும் நாகநந்தினி கையில் இருந்ததாகவும் மீதி நகையை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.

    இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மர்ம நபர்களை ஆஸ்டின்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பக லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×