என் மலர்
நீங்கள் தேடியது "2 house"
திருமங்கலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் உணவு- பழங்களை சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கூட க்கோவில் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், கட்டிட தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மாடி அறையில் தூங்க சென்றுவிட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டின் சமைய லறைக்குள் சென்ற அந்த கும்பல் அங்கிருந்த உணவு, குளிர்சாதன பெட்டியில் இருந்த பழங்களை சாப்பிட்டு விட்டு சாவகாச மாக பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடினர்.
பின்னர் வீட்டைவிட்டு வெளியேறிய அந்த கும்பல் அருகில் உள்ள மாயகிருஷ்ணன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருளாயி என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த இருளாயி கூச்சலிடவே உஷாரான கொள்ளையர்கள் அங்கி ருந்து ஓட்டம்பிடித்தனர். அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றும் பலனில்லை.
இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 வீடுகளிலும் அந்த கும்பல் 8 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. கொள்ளை குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






