என் மலர்
நீங்கள் தேடியது "குறிஞ்சி ஆண்டவர் கோவில்"
- குறிஞ்சி ஆண்டவருக்கு பல லட்சம் மலர்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- மலர்களால் முருகன் வடிவம் செய்யப்பட்டு இருந்தது.
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக 3 நாட்கள் நடைபெறும் கோடை விழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சியின் போது குறிஞ்சி ஆண்டவருக்கும் சிறப்பு மலர் வழிபாடு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு குறிஞ்சி ஆண்டவருக்கு பல லட்சம் மலர்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு வண்ணங்கள் கொண்ட மலர்களை கொண்டு தோரணம், அலங்காரம் அமைக்கப்பட்டதுடன் மலர்களால் முருகன் வடிவமும் செய்யப்பட்டு இருந்தது.
இதில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு குறிஞ்சி ஆண்டவர் அலங்காரம் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
விதவிதமான மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் கோடை இன்டர்நேஷனல் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- பல லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
- கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் கோலங்கள் போடப்பட்டும், விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டும் இருந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 17-ந்தேதி முதல் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த கோடைவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து சிறப்பித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தினந்தோறும் வெவ்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இன்று மலர் கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக மலர் வழிபாடு நடைபெற்றது. இதில் முருகன் தேரில் இருப்பது போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக அமைந்திருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் கோலங்கள் போடப்பட்டும், விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டும் இருந்தது.
இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இன்று மலர் அலங்கார வழிபாடு நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களில் ஒரு சில பொருட்களை நினைவுபடுத்தினர். நவ தானியங்களால் முருகன் உருவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புல் கராவைக்கொண்டு கொடைக்கானலில் புகழ்பெற்ற நட்சத்திர ஏரி வடிவமைக்கப்பட்டிருந்தது.
முருகனின் அறுபடை வீடுகளை நினைவுபடுத்தும் வகையில் மலர்கள் மற்றும் நவதானியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர். கொடைக்கானல் கொடை இன்டர்நேஷனல் உரிமையாளர் பாண்டுரங்கன் நிகழ்வில் கலந்து கொண்டு மலர் வழிபாடுஏற்பாடுகளை செய்திருந்தார்.
வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கொடை இன்டர்நேஷனல் ஹோட்டல் உரிமையாளர் பாண்டுரங்கன் சார்பாக மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடை இன்டர்நேஷனல் மேலாளர் ருத்ரமூர்த்தி, பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி, தண்டாயுதபாணி கோவில் அறங்காவல் துறை கண்காணிப்பாளர் முரளி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






