search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "body check up"

    ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    பல்வேறு நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதற்காக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தனியார் ஆஸ்பத்திரிகள் அடிப்படை சோதனைகள், அதிநவீன சோதனைகள் மேற்கொள்வதை வைத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

    வசதி படைத்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்து கொள்கிறார்கள். சாதாரண மக்கள் பொருளாதார பிரச்சினையால் அதை தவிர்த்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நோய்கள் முற்றிய நிலையில் ஆபத்தை சந்திக்கிறார்கள்.

    இதை தவிர்க்க ஏழைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்தார்.

    ரூ. 1000 கட்டணத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் வருமாறு:-

    சர்க்கரை, சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, சிறுநீரகம், கல்லீரல், மஞ்சள் காமாலை, இதய பரிசோதனை (இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே), வயிறு அல்ட்ராசவுண்டு, பெண்களுக்கு மார்பக புற்று நோய், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், எலும்பின் உறுதித்தன்மை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    இது தவிர கண், காது, மூக்கு, தொண்டை உள்பட ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்கான சோதனைகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    ×