என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரியில் கனமழை"

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
    தருமபுரி, 

    கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது.  வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் நேற்று  தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட  பல்வேறு    மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயில் தாக்கம்  அதிகரித்து இருந்தது. மதிய வேளையில் தான் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் மக்கள் வீட்டி லேயே முடங்கி இருந்தனர்.  இந்த நிலையில் நேற்றுமாலை  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் பயங்கர சத்தத்துடன்  இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்றுடன் இந்த மழை பெய்துள்ளது. 

    இந்த மழை  ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது.  இதனால் தருமபுரி நகரம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், பென்னாகரம், ஒகே னக்கல், பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் இடி மின்ன லுடன் மழை பெய்தது. இந்த மழையால்  அதிகாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வெகுநேரமாக மின்சாரம் வரவில்லை. பொதுமக்கள் வீட்டில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர். முதியவர்கள், குழந்தைகள் என பல தரப்பட்ட மக்கள் இந்த மின்சாரம் துண்டிப்பாமல் கடுமையாக பாதிக்க ப்பட்டது. தூக்கமின்றி பொதுமக்கள் விடிய விடிய தவித்தனர்.

    தருமபுரி நகரில் அதிகாைல பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கு ஓடியது.  தாழ்வான பகுதிக்கு மழை நீர் ஓடியது.  சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் காணப்பட்டது. இதனால் அதிகாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வண்டியை சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் மழை பெய்து முடிந்த பிறகு தான்  வண்டியை ஓட்டி சென்றனர். 

    இந்த மழையால் தருமபுரி  மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும்  ஏராளமான வாழை மரங்களும் காற்றில் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
    இேதபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில்  பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழை ெபய்துள்ளது. இதனால் ராயக்கோட்டை, நெடுங்கல், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தேன்க னிக்கோட்டை, அஞ்செட்டி, பெலுகொண்டபுரம்,  சூளகிரி, கல்லாவி, மத்தூர்,  சிங்காரபேட்டை உள்பட  இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×