search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high-rise tower"

    உடன்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்ல உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட உடன்குடி கிராமத்தில் உடன்குடிஅனல் மின்  நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இதைப்போல இந்த அனல் மின் நிலையத்திற்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டு வருவதற்கு கல்லாமொழி அருகே துறைமுகம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 2-ம்அலகு மற்றும் 3-ம்அலகு விரிவாக்கம் செய்வதற்காக காலன் குடியிருப்பு கிராமம் மற்றும் மாநாடு, தண்டுபத்து கிராமம் ஆகிய பகுதிகளில் விவசாயம் நடைபெறாத காலி இடங்கள் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் இந்த 2 கிராமங்களிலும் உள்ள காலி நிலங்களை பத்திரப்பதிவுசெய்ய முடியாமல் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையத்தில் உருவாகும் மின்சாரத்தை வெளியே எடுத்துச் செல்வதற்கு வசதியாக மாநாடு தண்டுபத்து கிராமபகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 சென்ட் காலி நிலத்தை வாங்கி, அதை சுற்றி கம்பி வேலி அமைத்து மின் கோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. 18 டன் இரும்பு பயன்படுத்தி சுமார் 500 அடிக்கு மேல் உயரத்தில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.
    இதுபற்றி நிலம் கொடுத்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    3 சென்ட் காலியிடத்தை நம்மிடம் எழுதி வாங்கி பத்திரம் பதிவு செய்து விட்டு, இடத்திற்கு தக்கபடி ரூ.2.25 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நமது வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு, அதற்கு பின்பு அந்த 3 சென்ட் இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கிறார்கள், 3 சென்ட்இட த்திலும் எந்த மரம், செடி, கொடிகள் இருக்கக்கூடாது என கூறுகிறார்கள்.

    மேலும் இதைசுற்றி உள்ள மற்ற நிலங்களைபின்பு வாங்குவதாக சொல்லி இருக்கிறார்கள் என்று விவசாயி கூறினார். முதல் அலகு பணி முதலில் செயல்படும் என்றும், அதன் பின்பு 2-ம்அலகு 3-ம் அலகு செயல்படும் என்றும், இவ்வளவு சக்தி வாய்ந்த நவீனரக அனல் மின்நிலையம் தென்பகுதியில் இப்போது தான் அமைக்கப்படுகிறது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×