search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lived"

    பரமத்தி வேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில்,  தி. கவுண்டம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பலமகாதேவி, வடகரையாத்தூர், ஆனங்கூர், கண்டிப்பாளையம், கு. அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், நன்செய் இடையார், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பூவன் வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். 

    வாழைத்தார் விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

    வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு  வந்து  தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

    கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ 400-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 300-க்கும் ,ரஸ்தாலி வாழைத்தார்ரூ 300-க்கும் ,பச்சநாடன் வாழைத்தார் ரூ 250-க்கும், மொந்தன் வாழைத்தார் 300-க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ 500 க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 350 க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ 350 க்கும், பச்சநாடன் வாழைத்தார் 
    ரூ 300க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ400 க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
    ×