search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Algarkovil"

    முகூர்த்தக்கால் நடப்பட்டு ராக்காயி அம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடங்கியது
    அலங்காநல்லூர்

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவத் தலங்களில் ஒன்றானது ஆகும். இந்த கோவிலின் உப கோவிலான உள்ள ராக்காயி அம்மன் கோவில் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையுடன் இணைந்து காணப்படுகிறது. 

    இங்கு பல ஆண்டுகளுக்குப்பின் திருப்பணி வேலைகள் தொடங்கியது. இதனையொட்டி முதற்கட்ட பணியாக இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 

    நேற்று மாலை   ராக்காயி அம்மன் கோவில் முன்பு பூர்வாங்க பூஜைகள், மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது.  பூஜைகள் அனைத்தும் ராக்காயி அம்மன் கோவிலில் நடைபெறுவதால் பக்தர்கள் வழக்கம்போல் நூபுர கங்கையில் நீராடலாம். ஆனால் ராக்காயி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. 

    பூஜைகள் நிறைவடைந்த பின் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர்   ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, உள்துறை கண்காணிப்பாளர் பிரதீபா மற்றும் உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.
    ×