என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் ஜெயம் ரவி"
- ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார்.
- ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன், பிரதர்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் லாரி மோதி பலியானார்.
- இதுபற்றி தகவல் கிடைத்த போது நடிகர் ஜெயம்ரவி ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை.
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நடிகர் ஜெயம் ரவியின் மதுரை மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் லாரி மோதி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்த போது நடிகர் ஜெயம்ரவி ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை.
இதை தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் நிலையூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பலியான ரசிகர் செந்தில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ரசிகரின் குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த நடிகர் ஜெயம்ரவி, செந்திலின் மனைவியிடம் அவரது வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்புத்தொகை செலுத்துவதாகவும், மேலும் குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் உறுதியளித்தார்.
நடிகர் ஜெயம் ரவி நிலையூர் பகுதிக்கு வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் திரளாக வந்து ஜெயம்ரவியை பார்த்தனர்.






