search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சிக்கொல்லிகளை"

    பரமத்தி வட்டாரத்தில் பூச்சிக்கொல்லிகளை கையாளுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே ஜங்கநாயக்கன்பட்டி கிராம விவசாயிகளுக்கும், பயிருக்கான பூச்சிகொல்லி மருந்துகளை கை தெளிப்பான், விசை தெளிப்பான், மின்கல தெளிப்பான் கொண்டு தெளிப்பவர்களுக்கும் பூச்சிக்கொல்லிகளை கவனமாக கையாளுதல் குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிர் பாதுகாப்பு முறைகள், அதற்கு உதவும் சாதனங்கள், விதை நேர்த்தி, பூச்சி, நோய் கண்காணிப்பு, பயிர் பாதுகாப்பின் பொருளாதார சேதார நிலை அதன் குறிக்கோள், இயற்பியல் முறை, உழவியல் முறை, எந்திர முறை, சட்டமுறை, குவாரன்டைன் சட்டம், உயிரியல் முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விளக்கினார்.

    பயிற்சியில் பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதி, பிரபு ஆகியோர் துறைசார்ந்த மானியங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும், மேற்கண்ட பயிற்சியின் நோக்கம் அதன் பயன்கள் குறித்து விளக்கமளிதனர்.

    நாமக்கல் பேயர் பூச்சிகொல்லி மருந்து நிறுவன களப்பணியாளர் குமார் பூச்சிமருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், பயிர் பாதுகாப்பு கருவிகள், தெளிப்பான்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கமளித்து பயிற்சியளித்தார். முடிவில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×