என் மலர்
நீங்கள் தேடியது "women missing பெண் மாயம்"
- சன்னியாசிகுண்டு ரைஸ்மில் தெருவில் உள்ள கணவர் வீட்டுக்கு புறப்பட்டார். உடன் அவரது தாய் வசந்தாவும் வந்தார்.
- வரும் வழியில் 4 ரோடு அண்ணா பூங்கா அருகே திடீரென தாயின் கையை உதறி தள்ளிவிட்டு, லட்சுமி அங்கிருந்து ஓடினார்.
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவருடைய மனைவி லட்சுமி (வயது 40). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
லட்சுமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 16-ந்தேதி மாலை 4 மணி அளவில் லட்சுமி, அரிசிபாளையம் நாராயணசாமி தெருவில் உள்ள தனது தாயார் வசந்தா(65) என்பவரது வீட்டில் இருந்து சன்னியாசிகுண்டு ரைஸ்மில் தெருவில் உள்ள கணவர் வீட்டுக்கு புறப்பட்டார். உடன் அவரது தாய் வசந்தாவும் வந்தார். அப்போது வசந்தா, அவரது கையை பிடித்துக்கொண்டு பத்திரமாக அழைத்து வந்தார். வரும் வழியில் 4 ரோடு அண்ணா பூங்கா அருகே திடீரென தாயின் கையை உதறி தள்ளிவிட்டு, லட்சுமி அங்கிருந்து ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா வயது முதிர்வு காரணமாக தன்னால் வேகமாக ஓடி மகளை பிடிக்க முடியவில்லை. அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் லட்சுமி மாயமானார். இருப்பினும் வசந்தா, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது பற்றி அறிந்ததும் ராஜா மற்றும் அவரது மகள்களும் சம்பவ இடத்திற்கு வந்து தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இது குறித்து ராஜா, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான அன்று லட்சுமி, பச்சை கலர் பூ போட்ட சேலை, பச்சை கலர் ஜாக்கெட் அணிந்திருந்தார். இடது பக்க கழுத்தில் ஒரு கருப்பு மச்சம், இடது கண் புருவத்தில் ஒரு கருப்பு மச்சம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






