என் மலர்

  நீங்கள் தேடியது "T20 World Cup Match"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • ரேமன் ரீபர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிளாய்ட் ரீபரின் மகன் ஆவார்.

  டிரினிடாட்:

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

  உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

  நிகோலஸ் பூரன் கேப்டனாக நீடிக்கிறார். துணை கேப்டனாக ரோவ்மேன் பாவல் நியமிக்கப்பட்டு உள்ளார். பேட்ஸ்மேன் எவின் லீவிஸ் அணிக்கு திரும்பி உள்ளார். அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் யானிக் கரியா, ஆல் ரவுண்டர் ரேமன் ரீபர் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

  இதில் ரேமன் ரீபர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிளாய்ட் ரீபரின் மகன் ஆவார். ரேமன் ரீபர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். யானிக் கரியா கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

  இருவரும் சர்வசே 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன் ஆந்த்ரே ரசல், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் வருமாறு:-

  நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பாவல், எவின் லிவீஸ், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், ஒடியன் சுமித், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரேமன் ரீபர், மெக்காய், அல்சாரி ஜோசப், அகேல் ஹொசைன், காட்ரெல், யானிக் கரியா.

  ×