search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t"

    • நீலகிரி மாவட்டத்தில் மழையால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டது.
    • 19 மற்றும் 20-ந் தேதிகளில் கூடலூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ராசா எம்.பி. பார்வையிடுகிறார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அறிந்திடவும் தி.மு.க துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ராசா நாளை நீலகிரிக்கு வருகிறார்.

    19 மற்றும் 20-ந் தேதிகளில் கூடலூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

    நீலகிரி எம்.பியின் நிகழ்ச்சிகள் முறைப்படுத்திட கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், இளங்கோ, திராவிடமணி, செந்தில், முன்னாள் நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம், பரமேஷ்குமார், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், சேகரன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், சிவானந்த ராஜா, காமராஜ், நெல்லை கண்ணன், சுஜேஷ், முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், சதக்கத்துல்லா, வெங்கடேஷ், மோகன்குமார் ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், துணை தலைவர் வாசிம் ராஜா, ஊட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் மாயன், பேரூர் செயலாளர்கள் சின்னவர், பிரகாஷ், கலியமூர்த்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×