search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swiss Parliament"

    • பாராளுமன்றம் மற்றும் அருகில் உள்ள கட்ட‌டங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • மர்ம நபர் வந்த கார், ட்ரோன்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது

    சுவிட்சர்லாந்து பாராளுமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர் புகுந்ததால், உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். புல்லட் புரூஃப் உடை அணிந்துகொண்டு காரில் வந்து இறங்கிய மர்ம நபர், பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். தெற்கு நுழைவு வாயிலில் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் வைத்திருந்ததால் அவரை கைது செய்தனர்.

    இதையடுத்து, பாராளுமன்றம் உள்ள பகுதியில் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டது. பாராளுமன்றம் மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். குறிப்பாக காரைப் பரிசோதிக்க, ட்ரோன்கள் மற்றும் ஒரு மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், காரில் எந்த வெடிபொருளும் இல்லை என்பது உறுதி செயய்ப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    சுவிஸ் நாட்டின் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #SwissParliament #FinanceMinister #Maurer
    ஜெனீவா:

    சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இவர் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

    இவர் 7 உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் கவுன்சிலுக்கு (மந்திரிசபை) தலைமை தாங்குவார். அதே நேரத்தில் அவருக்கென்று சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது. மந்திரிகளுக்கு உள்ள அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படுகிறது.

    மேலும் அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரியாக வயோலா அம்ஹெர்டும், பொருளாதார துறை மந்திரியாக கரின் கெல்லரர் சுட்டரும் தேர்வு செய்யப்பட்டனர். 
    ×