search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swiss female"

    • குர்ப்ரீத்திற்கு லேனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது
    • துர்நாற்றம் வீச துவங்கியதும் உடலை மறைக்க குர்ப்ரீத் வழி தேடினார்

    மேற்கு புது டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங்.

    குர்ப்ரீத், தனது சொந்த வேலைக்காக அடிக்கடி சுவிட்சர்லாந்து செல்வது வழக்கம். அவ்வாறு சென்றிருந்த போது அந்நாட்டை சேர்ந்த லேனா பெர்கர் எனும் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகி வந்தனர். சுவிட்சர்லாந்து செல்லும் போதெல்லாம் லேனாவை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் குர்ப்ரீத்.

    சமீப சில மாதங்களாக குர்ப்ரீத்திற்கு லேனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

    லேனா, வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக குர்ப்ரீத் சந்தேகிக்க தொடங்கினார். தன்னுடன் உறவில் இருந்து கொண்டே வேறொரு ஆணுடன் அவர் பழகுவதை விரும்பாத குர்ப்ரீத், லேனாவை கொல்ல திட்டமிட்டார்.

    எனவே, தனது திட்டத்தை செயல்படுத்த இந்தியாவில் வேறொரு பெண்ணின் தகவல்களை கொடுத்து ஒரு காரை வாங்கினார். பிறகு லேனாவை இந்தியாவிற்கு வர சொல்லி அழைப்பு விடுத்தார். குர்ப்ரீத்தின் அழைப்பின் பேரில் லேனா, அக்டோபர் 11 அன்று இந்தியா வந்தார். வந்தவருடன் 4 நாட்கள் வரை சிரித்து பேசி மகிழ்ந்திருந்த குர்ப்ரீத், அடுத்த நாள் லேனா எதிர்பாராத விதமாக அவரை தாக்கி, அவர் கை, கால்களை கட்டி பிறகு கொலை செய்தார்.

    சில நாட்களானதும், வீட்டிலேயே வைத்திருந்த லேனாவின் சடலத்திலிருந்து துர்நாற்றம் வீச துவங்கியது. உடலை மறைக்க வழி தெரியாமல் தவித்த குர்ப்ரீத், தான் வாங்கிய வேறொரு பெண்ணின் காரில் சடலத்தை ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் வைத்து, காரை நீண்ட தூரம் ஓட்டி சென்று, அங்குள்ள ஒரு அரசு பள்ளிக்கு அருகே ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரமாக வீசி விட்டு வேகமாக காரில் சென்று விட்டார்.

    லேனாவின் உடலை கண்ட எவரோ தகவல் கொடுத்ததன் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்விற்கு அனுப்பி வைத்து, விசாரணையை துவங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆராய்ந்ததில் குர்ப்ரீத் கார் சென்று வந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் குல்ப்ரீத்தை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

    இறுதியில் குற்றத்தை குல்ப்ரீத் ஒப்பு கொண்டார்.

    குல்ப்ரீத் வீட்டிலிருந்த மற்றொரு காரையும், சுமார் ரூ. 2.25 கோடி பணத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×