என் மலர்
நீங்கள் தேடியது "Suspended VAO"
- சென்னிமலையில் மண்டல துணை தாசில்தாரின் கையெழுத்து போட்டு போலி பட்டா வழங்கிய கிராம நிர்வாக அலுவலர்.
- இதையடுத்து வி.ஏ.ஓ., சிவக்குமாரை ஆர்.டி.ஓ. நேற்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னிமலை:
சென்னிமலையில் மண்டல துணை தாசில்தாரின் கையெழுத்து போட்டு போலி பட்டா வழங்கிய சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறை தாலுகா சென்னிமலை உள் வட்டம் எக்கட்டாம் பாளையம் பி கிராமம், மற்றும் சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் சிவகுமார்.
இவர் நத்தம் பட்டா வழங்குவதற்காக 3 பேருக்கு மண்டல துணை தாசில்தார் கையெழுத்தை இவரே போலியாக தயாரித்து தாசில்தார் சீல் போன்றவற்றை வைத்து வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த புகாரின்படி ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் விசாரித்தார். சிவகுமார் போலி பட்டா வழங்கியது உறுதியானது. சில கையெழுத்துக்கள் போலி என்பதை உறுதி செய்தார்.
இதையடுத்து வி.ஏ.ஓ., சிவக்குமாரை ஆர்.டி.ஓ. நேற்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.






