என் மலர்
நீங்கள் தேடியது "Supply of seeds at subsidized cost"
- விவசாயிகளுக்கு கபிலர்மலை வேளாண்மை அலுவலகத்தில் சோளம், சாமை மற்றும் பயறு வகைப்பயிர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
- மானியவிலையில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளு மாறு கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் ராதாரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை வேளாண்மை அலுவலகத்தில் சோளம், சாமை மற்றும் பயறு வகைப்பயிர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயிறு வகைப்பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதைகள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிராமணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன. எனவே மேற்கண்ட விதைகள் தேவைப்படும் கபிலர்மலை வட்டார விவசாயிகள் தங்களின் நில சிட்டா மற்றும் ஆதார் நகல் கொண்டு வந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதையினை மானியவிலை யில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளு மாறு கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் ராதாரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.






