search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "super gillies"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG#TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 25-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.

    ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். 

    பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 

    10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



    அடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG
    ×