search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunil Lanba"

    பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் அட்டகாசம் குறைந்துள்ளது என்று இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்பு படை வீரர்கள் 74 வாகனங்களில் சென்றபோது தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தான்.



    இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவை கொதிப்படைய செய்தது. இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு நடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம்களை அழிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பிப்ரவரி 26-ந்தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் இந்திய ராணுவ விமானங்கள் புகுந்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் அட்டகாசம் குறைந்துள்ளது என்று இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

    இந்திய ராணுவத்தின் பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. தீவிரவாத தாக்குதலுக்கு கொடுத்த பதிலடியால் புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் எங்களது விரோதியின் நடவடிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    பாலகோட் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியா தனக்கு தானே விதித்துள்ள கட்டுப்பாட்டை எந்த ஆபத்து வந்தாலும் மீறுவதற்கு தயாராக உள்ளது என்று தெரிவித்தது. மேலும் வட அரேபிய கடலில் இந்தியாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், பாகிஸ்தானின் அடாவடியை முறியடித்து நிறுத்தப்பட்டது. இதற்கு நல்ல பலன் அளித்தது. இதனால் பாகிஸ்தானின் அட்டகாசம் குறைந்துள்ளது.

    சீனா கடற்படை இந்திய பெருங்கடலில் தனது கப்பல்களை நிலை நிறுத்தி உள்ளது. நமது கடற்படையும் தற்போது போதுமான பலத்துடன் உள்ளது.

    ஆனால் சீன கடற்படை தனது பலத்தை அதிகரித்து அதிக முதலீடுகளை செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 80 போர்க்கப்பல்கள், மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் கடல் பகுதியில் நிலை நிறுத்தி உள்ளது. தற்போது சீன கடற்படை, அமெரிக்க கடற்படைக்கே சவாலாக விளங்குகிறது.

    நாங்கள் தனி கடற்படையுடன் சமன்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் இயற்கையாகவே ஒவ்வொரு ஆண்டும் அதிக கப்பல்களை கையாள விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×