என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sundarabandiyapuram"

    • தென்காசி கிழக்கு ஒன்றியம் சுந்தரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள 3 ரேஷன் கடைகளில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் அறிவுறுத்தலின்படி, சுந்தரபாண்டியபுரம் பேரூர் தி.மு.க. செயலாளர் பண்டாரம் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் முன்னிலையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி கிழக்கு ஒன்றியம் சுந்தரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள 3 ரேஷன் கடைகளில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் அறிவுறுத்தலின்படி, சுந்தரபாண்டியபுரம் பேரூர் தி.மு.க. செயலாளர் பண்டாரம் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் முன்னிலையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ராஜிசங்கரன், ஐயம்மாள்சண்முகவேல், ஆனந்தசக்தி, முப்புடாதிமாசானம், வார்டு செயலாளர்கள் தங்கராஜ், கணேசன், துரைமணி முருகையாதேவர், ஐயப்பன்வேளார், மாரியப்பன், சாமி மாரிமுத்து, பால்ராஜ், ஒன்றிய பிரதிநிதிகள் கணபதிநாடார், கணபதிதேவர், மாசானம், ச. மாரிமுத்துபாண்டியன்,முத்துபில்டர் ராமமூர்த்தி, முப்புடாதி, மாசனராஜ்,பிரம்மநாயகம், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×