என் மலர்
நீங்கள் தேடியது "Sumangali Mariamman Temple"
- வருடம் முழுவதும் கம்பம் நடப்பட்டு இருப்பதால் இங்குள்ள மாரியம்மன், நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
- சுமங்கலி மாரியம்மன் 1 லட்சத்து 8 ஆயிரம் வளையல்கள் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. வருடம் முழுவதும் கம்பம் நடப்பட்டு இருப்பதால் இங்குள்ள மாரியம்மன், நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அம்மனுக்கு தினந்தோறும் பூஜைகள் நடந்து வருகிறது.
முக்கிய திருவிழா நாட்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மக்களுக்கு அருள்பாலித்து வருவது வழக்கம். நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெண்கள் ஆயி ரக்கணக்கான வளையல்களை அம்மனுக்கு நேர்த்தி கடனாக வழங்கினர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை யொட்டி அம்மனுக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வளையல்கள் அணி விக்கப்பட்டு அலங்காரம் செய்ய ப்பட்டிருந்தன.
அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர். அப்போது நித்திய சுமங்கலி மாரியம்மன் 1 லட்சத்து 8 ஆயிரம் வளையல்கள் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.






