search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudents Eligible"

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.
    • சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.

    சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.

    பாயில் பிரிவில் ஆஷிக், ஜீடித் முதல் பரிசையும், ஆகாஷ் 2-ம் பரிசையும் பெற்றனர். சகாய ஆன்றோ, எபன் 3-ம் பரிசை பெற்றனர்.சேபர் பிரிவில் செரின் முதல் பரிசையும், வின்சர் 2-ம் பரிசையும் பெற்றனர்.

    பவுல் ராஜ், ரோஷன் 3-ம் பரிசையும் பெற்றனர். ஜீனியர் மாணவர் சேபர் பிரிவில் ஜெர்னிசன், தருண்குமார் முதல் மற்றும் 2-ம் பரிசையும் பெற்றனர். பாயில், எப்பீ பிரிவுகளில் மெல்சன், அமீர் 2-வது பரிசு பெற்றனர்.

    மொத்தம் 26 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டிகளில் வெற்றி பெற்றுமாநில அளவிலான வாள் வீச்சு போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளிதாளாளர் டாக்டர்.தினேஷ், முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி, டேனியல் பயிற்சியாளர் ஏஞ்சல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    ×