என் மலர்
நீங்கள் தேடியது "sudden fire in a parked car"
- காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஆத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே அழகர்நாயக்கன் பட்டி சாமிகண்ணு தெருவில், அஜித் என்பவருக்கு சொந்தமான கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கார் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிவதாக ஆத்தூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் வந்தது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த காருக்கு யார் தீ வைத்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






