என் மலர்

  நீங்கள் தேடியது "sudan riots"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  ஹர்டோம்:

  சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

  ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

  அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஹர்டோமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனால், சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

  சூடானில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு

  இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சூடான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூடான் தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது.
  கார்ட்டூம்:

  ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989-ம் ஆண்டு முதல் ஒமர்-அல்-பசீர் அதிபராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தப்பட்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

  அதன்பிறகு ராணுவமே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களை கொண்ட புதிய ஆட்சியை அமைத்தது. அதன் பிரதமராக அப்துல்லா காம்டோக் இருந்து வந்தார்.

  கடந்த மாதம் 25-ந்தேதி அந்த அரசையும் ராணுவம் கலைத்தது. நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு சூடான் மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். வீதியில் இறங்கி போராடினார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டது. ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  சூடான் கலவரம்

  முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.

  இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க ராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 18 பேர் உயிரிழந்தனர். ராணுவத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பல இடங்களிலும் கலவரம் நடந்து வருகிறது. 

  ×