search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subsidy prices"

    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    ஒவ்வொரு விவசாயிகளின் வருமானத்தையும் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நாடு முழுவதும் வளரும் மாவட்டங்களாக 111 மாவட்டங்களை தேர்வு செய்து உள்ளது.

    இந்த விவசாயிகளின் நலவாழ்வு இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் வட்டாரத்தில் காசி ரெட்டியாபட்டி, தாதம் பட்டி, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் கட்டங்குடி, வேலாயுதபுரம், காரியாபட்டி வட்டாரத்தில் மறைக்குளம், முடுக்கன்குளம், தோனுகால், தோப்பூர், கழுவனச்சேரி, வழுக்கலொட்டி, திருச்சுழி வட்டாரத்தில் பிள்ளையார் தொட்டியான்குளம், முத்துராமலிங்காபுரம், புரசலூர், சவ்வாசுபுரம், நரிக்குடி வட்டாரத்தில் பூம்பிடாகை, உலக்குடி, சாத்தூர் வட்டாரத்தில் ஒத்தையால், சாத்தூர் சடையம்பட்டி, சிவகாசி வட்டாரத்தில் நெடுங்குளம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் சூரார்பட்டி, ஊத்துப்பட்டி, கங்கர்செவல், வத்திராயிருப்பு வட்டாரத்தில் ஆயர்தர்மம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் முள்ளிக்குளம் மற்றும் ராஜபாளையம் வட்டாரத்தில் கோவிலூர் ஆகிய 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு டிராக்டர் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.97.05 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வம் உள்ள மேற்கண்ட 25 கிராமங்களில் உள்ள விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, இரண்டாம் தளம், வேளாண்மை இணை இயக்குநர் வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், அலுவலகத்தையும், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, கலசலிங்கம் பல்கலைக்கழகம் எதிரில், கிருஷ்ணன்கோவில் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
    ×