search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Participate"

    • போட்டியை நாலாட்டின்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜெஸ்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ராமசாமியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை 17 வயதிற்குட்பட்ட ஆண்க ளுக்கான மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள காந்தி மைதானத்தில் தொடங்கியது.

    மாதங்கோவில், பழைய பஸ் நிலையம் வழியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியானது கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள கே.ஆர்.மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது. போட்டியை நாலாட்டின்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜெஸ்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி யில் வெற்றி பெற்ற காட்டுநாயக்கன்பட்டி நட்ராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவன் மனோஜ்குமாருக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், கேடயம் வழங்கப்பட்டது. அதே பள்ளியை சேர்ந்த மாணவன் கருத்தப்பா ண்டிக்கு 2-வது பரிசாக ரூ.2 ஆயி ரம்,கேடயமும், 3-வது இடம் பிடித்த மாரிசெல்வத்திற்கு ரூ. 1,000, கேடயம் வழங்கப் பட்டது. ஆறுதல் பரிசாக 25 மாணவர்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத் தலைவர், தாளாளர், கல்லூரி இயக்குனர், முதல்வர்கள் ஆகியோர் களின் வழிகாட்டுதலின்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×