search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student father"

    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைபெற்ற 3 பேரை விடுதலை செய்தது வருத்தமளிக்கிறது என்று பலியான மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறினார். #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    விருத்தாசலம்:

    பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த மாணவி காயத்ரியின் தந்தையும், முன்னாள் அரசு கல்லூரி முதல்வருமான வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 3 பேருக்கும் மரண தண்டனை என்று அறிவித்து, அதன்பிறகு அதனை ஆயுள் தண்டனை என மாற்றினார்கள். இதற்காக என்ன முயற்சி செய்தார் களோ? தெரியவில்லை.

    அன்றே நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள். என் மகளை பறிகொடுத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. பல இன்னல்களை, பல சோதனைகளை, பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

    எங்கள் வீட்டு தெய்வமாக காயத்ரி இருக்கிறாள். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    “கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி 3 மாணவிகளையும் தீ வைத்து கொளுத்திய நபர்களுக்கு ஒரு நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனை என்கிறார். அப்படி என்றால் முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா?. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்து உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு?. இது ஜனநாயகமா?, சர்வாதிகாரமா?. நீதி, நேர்மை கெட்டு போய்விட்டது. கோகிலவாணி இறந்த பிறகு படுத்த படுக்கையான அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்தே போய்விட்டார்.



    இங்கு ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரமாக இருக்கிறது. எதை எடுத்தாலும் லஞ்சம், லாவண்யம். நீதி எங்கு இருக்கிறது? ஏன் இந்த பித்தலாட்டம். முதல்-அமைச்சர் ‘உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள்’ என கூறுகிறார். அதை எல்லாம் ஏற்க முடியாது. கவர்னர் முதலில் விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார்.

    தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இடையில் என்ன நடந்தது?. 3 மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பை கொடுத்து நிறைவேற்றாத அரசு ஒன்று இங்கு இருக்கிறது. எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சை துரோகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    பாசத்துடன் வளர்த்த என் அன்பு மகளை பிறந்தநாள் அன்று இழந்துவிட்டேன் என மாணவியின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். #ChennaiCop #LoverShotDead
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே அன்னியூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதியை அவரது காதலன் கார்த்திக் வேல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்பு கார்த்திக்வேலும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுட்டு கொல்லப்பட்ட மாணவி சரஸ்வதியின் உடலை பார்த்து அவரது தந்தை சேகர் கதறி அழுதார். பின்பு அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    நான் சாதாரன விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் சரஸ்வதி. அவள் சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் கொண்டவள். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாள். இதன் காரணமாக அவளுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.

    அவள் டாக்டராகி கிராம மக்களுக்கு சேவை செய்வேன் என்று அடிக்கடி கூறுவாள். அவள் நன்றாக படித்து வந்தாள். இந்த நிலையில் தான் என் மகளுக்கும் போலீஸ்காரர் கார்த்திக்வேலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த விபரம் அறிந்த நாங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்று இரவு சரஸ்வதிக்கு பிறந்தநாள் விழா வீட்டில் சிறப்பாக கொண்டாடினோம்.

    நீன்டநேரம் சரஸ்வதியும், கார்த்திக்வேலும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்கள் அறையில் இருந்து துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது என் மகளும், கார்த்திக்வேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.



    பாசத்துடன் வளர்த்த என் அன்பு மகளை இழந்துவிட்டேனே, மருத்துவராகி கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறிய எனது மகளின் கனவு தகர்ந்து விட்டதே.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCop #LoverShotDead
    ×