என் மலர்
நீங்கள் தேடியது "State Bank of India"
- பாரத ஸ்டேட் வங்கி விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
- ரூபாய் ஒரு கோடி அளவிலான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது.
கடலூர்:
சிதம்பரம் கிளை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சிதம்பரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கடன் திட்டங்கள் வழங்கப்பட்டது. வங்கி சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு கோடி அளவிலான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அய்யனுர் சிறுகாலூர் மற்றும் பண்ணப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக கிளை முதன்மை மேலாளர் .புருஷோத்தமன், புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ் பாபு, சென்னை தலைமை அலுவலக துணை பொது மேலாளர் ஜெகதீஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.






