என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLC. Writing the exam"

    • எஸ்.எஸ். எல். சி. பொது தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
    • வினாத்தாள் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ந் தேதியும், பிளஸ்- 1 பொதுத்தேர்வு இன்றுடனும் நிறைவு பெறுகிறது.

    இதைத்தொடர்ந்து எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ். எல். சி. பொது தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக 113 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக 6 மையங்கள் என மொத்தம் மாவட்டத்தில் 119 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் ஈரோடு உட்பட மாவட்டத்தில் 7 கட்டு காப்பு மையத்தில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நாளை தேர்வையொட்டி அந்தந்த தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள யுஆர்சி பள்ளி, கோபியில் உள்ள குருகுலம் பள்ளி, சத்தியமங்கலத்தில் ராகவேந்திரா பள்ளி என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்த பள்ளிக்கல்வித்துறை தேதி அறிவித்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும்.

    ×