search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka youth arrest"

    ராமநாதபுரத்தில் விசா முடிந்தும் நாட்டை விட்டு செல்லாமல் இங்கேயே தங்கி இருந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

    பின்னர் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் இலங்கை திரிகோணமலை செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் மோகனரூபன் (வயது25) என தெரியவந்தது.

    மோகனரூபன் விசா பெற்று சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். 3 மாதத்திற்கு முன்பு விசா காலாவதியாகி விட்டது. ஆனாலும் அவர் இலங்கை செல்லாமல் ராமநாதபுரத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனரூபனை கைது செய்தனர்.
    உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி கடற்கரை பகுதியில் பைபர் படகில் வந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள், தங்கம் போன்றவை கடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அவ்வப்போது அகதிகளாக சிலர் கள்ளத்தோணியில் ராமேசுவரத்திற்கு வருவதுண்டு.

    நேற்று உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி கடற்கரை பகுதியில் பைபர் படகில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார். அவர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த அவர்கள், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் இலங்கையைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் சகாயபஸ்டீபன் என்ற காண்டீபன் எனவும், இவர் சட்ட விரோதமாக பைபர் படகில் வந்தது தெரிய வந்தது.

    அவர் கடத்தலுக்காக வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    ×