என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Priya"

    தொடர் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் கேரள மக்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு நடிகை ஸ்ரீபிரியா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #SriPriya
    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக ரூபாய் 10 லட்சம் பணத்தை ராஜ்குமார் சேதுபதி - ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods #SriPriya
    ×