என் மலர்
நீங்கள் தேடியது "Speech competition for college and school students"
- அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி போட்டிகள் நடத்தப்படுகிறது.
- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
கோவை:
தமிழக அரசு தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுப்பட்ட தலைவர்களான காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளில் மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்த அறிவறுத்தியுள்ளது.
வரும் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் மற்றும் 17-ந் தேதி பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வரும் 15 மற்றும் 17-ந் தேதிகளில் ராஜவீதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுபோட்டியை நடத்துகிறது.
இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் கட்டாயம் பெற வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து 2 மாணவர்கள் பங்கேற்க லாம். பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
தவிர, அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.இதில், அண்ணா பிறந்த நாள் போட்டியில் பள்ளி மாணவர்கள் தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவருக்கு அண்ணா, அண்ணாவின் மேடை த்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ்வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் என்ற தலைப்பில் போட்டி நடக்கிறது.
பெரியார் பிறந்த நாளில், தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார்காண விரும்பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் மூட நம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலக சிந்தனையாளர்களும் பெரியாரும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடக்கிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.






