search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sowing Works"

    • மா, பலா, முந்திரி, கொய்யா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும்.
    • பசுமை குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கனமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் பாதுகாப்பது குறித்து தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கத்தரி, வெங்காயம், வெண்டை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கறி பயிர்களுக்கு நல்ல வடிகால் வசதி, மழைநீர் தேங்கா வண்ணம் அமைக்க வேண்டும். முன் தடுப்பு நடவடிக்கையாக டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூேடாமோனஸ் பூஞ்சாண உயிரியியல் கட்டுபாடு மருந்துகளை மண் மூலமாகவும், இலை வழியாகவும் தெளிக்க வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். தேவையான அளவில் வடிகால் வசதி செய்திட வேண்டும்.

    கனமழை காற்று முடிந்த உடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் நணைக்க வேண்டும். மிளகு செடிகளில் நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். கொக்கோவில் அதிகப்படியான இலைத்த ளைகளை கவாத்து செய்ய வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

    பசுமை குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்ற உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். கிழந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும்.

    அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.வருடாந்திர பயிரான வாழை காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும்.

    நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். வடிகால் அமைக்க வேண்டும். உபரி நீர் வடிந்த பின் நடவு, விதைவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுக்க வேண்டும். இதேப்போல் இதர தோட்டக்கலை பயிர்களில் அனைத்த வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், உதவி தோட்டகலை அலுவ லர்களை ெதாடர்பு கொள்ள வேண்டும்.

    தஞ்சை, பூதலூர் தோட்ட க்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வியை 9943422198 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு, திருவோணம் உதவி இயக்குனர் சாந்திபிரியாவை 9488945801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதேப்போல் அம்மாபே ட்டை, திருவையாறு, பாபநாசம் தோட்டகலை உதவி இயக்குனர் பரிமே லழகனை 9445257303, கும்பகோணம், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் உதவி இயக்குனர் அனுசி யாவை 9842569664, பட்டுக்கோட்டை, மதுக்கூர் இயக்குனர் ராகிணியை 9597059469, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உதவி இயக்குனர் வள்ளி யம்மாளை 8903431728 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×