search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South West Bengal Sea"

    தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. #IndiaMeteorologicalDepartment #HeavyRainfall
    சென்னை:

    சென்னையை நோக்கி கடந்த வாரம் வந்த பெய்ட்டி புயல் ஆந்திரா பக்கம் சென்று விட்டதால் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மழை இல்லை. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது.

    தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது.

    இதுபோல் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.



    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஒரு சில நேரங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndiaMeteorologicalDepartment #HeavyRainfall
    ×