என் மலர்

  நீங்கள் தேடியது "Soorma"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் சினிமாவில் பிரபலமாகியிருக்கும் நடிகை டாப்சி, பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமான சூர்மா படத்தில் நடிப்பதற்காக ஹாக்கி பயிற்சி எடுத்து வருகிறார். #TaapseePannu #Soorma
  தென் இந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்து இந்தியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் டாப்சியின் அடுத்த அவதாரம் ஹாக்கி வீராங்கனை. பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு சூர்மா என்ற பெயரில் படமாகிறது.

  இதில் கதாநாயகியாக நடிக்கும் டாப்சி அந்த வேடத்துக்காக ஹாக்கி கற்றுக் கொண்டிருக்கிறார். ‘எனக்கு விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம். இந்த படத்துக்காக ஹாக்கி கற்றுக்கொண்டது மறக்க முடியாத அனுபவம். பொதுவாக விளையாட்டு வீராங்கனை என்றால் கடினமானவராக இருக்க வேண்டும்.

  ஆனால் நான் மிகவும் மென்மையானவள். எனவே விளையாட்டு வீராங்கனையாக மாறியது பெரிய சவாலாக இருந்தது. நான் இதற்கு முன்பு ஹாக்கி விளையாட்டை தொலைக்காட்சியில் கூட பார்த்தது இல்லை. ஆனால் ஒரு இந்திய குடிமகளாக சந்தீப் சிங் பற்றி அறியாமல் இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்.  இந்த படம் வெளியான பின், சந்தீப் சிங்கை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்’’ என்று கூறியவர் தனது ஆரம்பகால சோதனைகளையும் பகிர்ந்துள்ளார். ‘வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆரம்பத்தில் சோதனைகளை தாங்கியதால் தான் இந்த இடத்தில் இருக்கிறேன். இன்னும் மேலே செல்ல வேண்டும் என்றால் சோதனைகளை தாங்கித் தான் ஆகவேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். #TaapseePannu #Soorma

  ×