search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sold in farmers markets in"

    • உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    தமிழ் மாதம் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலா னோர் அசைவ உணவு வகைகளை தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி களை விற்பனைக்கு கொ ண்டு வந்திருந்தனர்.

    அனை த்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865-க்கு விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்றும் உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    ×