என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகுமான் கான்"

    • தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது.
    • இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான்.

    சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய 5 நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ரகுமான் கானின் பேச்சுக்கும் எழுத்துக்கும் நான் ரசிகன்.

    * தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது.

    * ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞரிடம் இருந்தது.

    * கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரகுமான் கான்.

    * ரகுமான் கானை அ.தி.மு.க.வுக்கு வரச்சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்தபோதும் அவர் செல்லவில்லை.

    * ரகுமான் கான் மீது வெடிகுண்டு வீசப்பட்ட போதிலும் அவர் அஞ்சவில்லை.

    * மாநாடுகளில் ரகுமான் கான் பேச எழுந்தாலே கூட்டம் ஆர்ப்பரித்து விடும்.

    * என்னுடைய உடல்நிலை குறித்து அக்கறையுடன் நலம் விசாரித்தார் ரகுமான் கான்.

    * இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×