என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிசார் செயற்கைக்கோள்"

    • பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் வரையிலான மாற்றங்களையும் படம் பிடிக்க முடியும்.
    • பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றிய 3டி திரைப்படம் போன்ற ஒரு பார்வையை விஞ்ஞானிகளுக்கு வழங்கும்.

    பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசா கூட்டு முயற்சியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் கடந்த மாதம் 30-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

    5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட இந்த செயற்கைக்கோளில் எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் ஆகிய இருவேறு வகை 'சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்' என்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் விண்ணில் ஏவப்பட்டு 17 நாட்களுக்கு பிறகு செயற்கைக்கோளில் இருந்த 12 மீட்டர் நீளம், 64 கிலோ எடை கொண்ட ஆன்டெனா விரிந்து பணியை தொடங்கி உள்ளது. இதற்கு விஞ்ஞானிகள் 'தங்க மலர்' என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த ஆன்டெனா திறந்தபோது, விண்வெளியில் தங்க மலர் பூத்ததுபோல் இதழ்கள் ஒவ்வொன்றாக விரிந்தது. இதிலுள்ள 123 இலகுரக எந்திரக் கட்டமைப்புகள் அதற்கு வலிமையைக் கொடுக்கின்றன. தொடர்ந்து பேரழிவுகளைக் கூர்ந்து கவனிக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் வரையிலான மாற்றங்களையும் படம் பிடிக்க முடியும். பகல் அல்லது இரவு, மழை, மேகம் அல்லது மூடுபனி என எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து செயல்படும். இது ஒவ்வொரு 12 நாட்களுக்கும் ஒரு முறை முழு பூமியின் வரைபடத்தையும் தயாரிக்கிறது. இது காலப்போக்கில் பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றிய 3டி திரைப்படம் போன்ற ஒரு பார்வையை விஞ்ஞானிகளுக்கு வழங்கும்.

    இந்த ஆன்டெனாவில் மிகவும் சக்தி வாய்ந்த செயற்கை துளை ரேடார் தொழில்நுட்பம் உள்ளது. சாதாரண சூழ்நிலைகளில், இந்த ஆன்டெனா ஒரு குறிப்பிட்ட வரம்பில் செயல்படுகிறது. இது 19 கிலோமீட்டர் நீளமுள்ள இடத்தில் பணியை தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    துல்லியமாக கணிக்கலாம்

    இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குனர் சஞ்சய் சர்மா கூறும்போது, 'ஆன்டெனா முழுமையாக விரிவடைந்து ஒரு தங்கப் பூவைப் போல பூத்தபோது, இந்த தருணம் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சிகரமாகவும் இருந்தது. பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனை அந்த தருணத்தில் நாங்கள் பெற்றோம்' என்றார்.

    இதுகுறித்து நாசா திட்ட விஞ்ஞானி ரோசாலி வேகா கூறுகையில், 'நிசார் செயற்கைக்கோள் காலநிலை நெருக்கடி மற்றும் இயற்கை பேரழிவுகளை முன்பைவிட துல்லியமாக கணிக்க உதவும்' என்றார்.

    • நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • நிசார் செயற்கைக்கோளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில், இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.

    நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.

    • பல்வேறு கட்ட சோதனைகளுக்காக நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிக்கொண்டே போனது.
    • 2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது

    பூமியை கண்காணித்து தகவல்களை சேகரிப்பதற்காக 'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும்.

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்தியாவும், அமெரிக்காவும் இத்திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டன.

    இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. விண்ணில் ஏவும்போது எதிர்பார்த்ததைவிட அதிக வெப்பம் அடைவதற்கான அபாயத்தை குறைக்க பிரதிபலிப்பு பூச்சு பயன்படுத்த கலிபோர்னியாவில் உள்ள உற்பத்தியாளரிடம் செயற்கைக்கோள் திருப்பி அனுப்பப்பட்டது. அங்கு மீண்டும் சரி செய்யப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டது.

    பல்வேறு கட்ட சோதனைகளுக்காக நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிக்கொண்டே போனது. பின்னர், கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நிசார் செயற்கைக்கோள் முழு சோதனையை முடித்து கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 747 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 500 வாட்ஸ் சக்தி திறன் உள்ளது. இந்த செயற்கைக்கோள் தயாரிக்க சுமார் ரூ.1,805 கோடி செலவிட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது. குறிப்பாக, பனிப்பாறைகள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும்.

    அத்துடன், நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை கண்காணிக்கவும், அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும். அத்துடன் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை வளங்களை நிலையாக நிர்வகிக்க உதவி செய்கிறது. தொலைதூர உணர்தலுக்காகவும், பூமியில் இயற்கை செயல்முறைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.

    இதன் இடதுபுறம் நோக்கிய கருவிகள் அண்டார்டிக் பகுதியிலுள்ள 'கிரையோஸ்பியர்' என்று அழைக்கப்படும் பனிப்பாறைகள், பனிமலைகள், பனிமூடிய பகுதிகள், உறைந்த நீர் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். மேம்பட்ட ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி பூமியின் நிலம் மற்றும் பனி நிறைகளின் உயரத்தை ஒரு மாதத்திற்கு 4 முதல் 6 முறை 5 முதல் 10 மீட்டர் தெளிவுத்திறனில் வரைபடமாக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

    ×