என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு அலுவலர்கள்"

    • மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • சென்னை மாவட்டத்திற்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் நியமனம்.

    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சி. விஜயராஜ்குமார் ஐஏஎஸ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரஜேந்திர நவிந்த் ஐஏஎஸ், சென்னை மாவட்டத்திற்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மதுமதி ஐஏஎஸ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வீரராகவ ராவ் ஐஏஎஸ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தர்மேந்திர பரிதமாப் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்டத்திற்கு வள்ளலார் ஐஏஎஸ், கோவை மாவட்டத்திற்கு நந்தகுமார் ஐஏஎஸ், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுந்தரவள்ளி ஐஏஎஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம் ஐஏஎஸ், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மகேஸ்வரன் ஐஏஎஸ் ஆகியோர் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×