என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகாண்ட் காவல்துறை"

    • கயிறு கட்டி தொங்கு பாலத்தின் மேலிருந்து வீரர்கள் இழுக்க நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாய் மீது பரிவு காட்டி, அதனை பத்திரமாக மீட்ட போலீசாரை பாராட்டி பதிவிட்டனர்.

    உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, அசாம், உத்தரகாண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாயை போராடி மீட்ட வீடியோவை உத்தரகாண்ட் காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    அதில், பாகிரதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உத்தரகாசியின் ஜோஷியாடா பகுதியில் ஒரு தொங்கு பாலத்தின் கீழே ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி தவிக்கிறது. அதனை பத்திரமாக மீட்க தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஒரு வீரர் பாலத்தில் இருந்து கீழே இறங்கி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாயின் உடலில் துணியை கட்டுகிறார். அதன் மீது கயிறு கட்டி தொங்கு பாலத்தின் மேலிருந்து வீரர்கள் இழுக்க நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாய் மீது பரிவு காட்டி, அதனை பத்திரமாக மீட்ட போலீசாரை பாராட்டி பதிவிட்டனர்.


    ×