என் மலர்
நீங்கள் தேடியது "செவிலியர்கள் சஸ்பெண்ட்"
- அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்த செவிலியர்கள் குரங்குடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
- சம்பவம் தொடர்பாக ஐந்து மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநில மருத்துவமனை ஒன்றில் பணியில் இருக்கும் போது செவலியிர்கள் குரங்குடன் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து வீடியோ எடுத்து வெளியிட்ட 6 செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பஹ்ரைச்சில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்த செவிலியர்கள் குரங்குடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. மகப்பேறு பிரிவில், பணி நேரத்தில் குரங்குக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் விமர்சனத்துக்குள்ளானது.
வைரலான வீடியோவை பார்த்த, மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் 6 செவிலியர்களையும் சஸ்பெண்ட் செய்தார். இது குறித்து அவர் சுற்றறிக்கையில், செவிலியர்கள் பணியில் இருக்கும் போது குரங்கை வைத்து ரீல்ஸ் எடுத்து பணியில் அலட்சியம் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மருத்துவக் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வீடியோவில் உள்ள 6 செவிலியர்களும் சஸ்பென்ட் செய்யப்படுகின்றனர், என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஐந்து மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.






