என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிகர லாபம்"
- 2024 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17,483 கோடியை பதிவு செய்துள்ளது.
- கடந்த வருடத்தை விட இந்தாண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 213.7% வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை விட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது.
2024 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17,483 கோடியை பதிவு செய்துள்ளது.
2023 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,573.8 கோடியாக இருந்தது. இந்நிலையில், கடந்த வருடத்தை விட இந்தாண்டு அந்நிறுவனத்தின் நிகர லாபம் 213.7% வளர்ச்சி அடைந்துள்ளது.
அதே சமயம் 2023 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,392 கோடியாக இருந்தது. இந்நிலையில், ஒரே வருடத்தின் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 9.1% வளர்ச்சி அடைந்து இந்தாண்டு ரூ.12,434 கோடியை எட்டியுள்ளது.
இதன்மூலம், டாடா நிறுவனங்களில் அதிக லாபம் தரும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உருவெடுத்துள்ளது.
அதே சமயம் வருடத்திற்கான நிகர லாபத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமே இன்னமும் முன்னிலையில் உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருட நிகர லாபம் ரூ.45,908 கோடியாகவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருட நிகர லாபம் ரூ.31,399 கோடியாக உள்ளது.