என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கை அறுவை சிகிச்சை"

    • அக்‌ஷய் குமார் மற்றும் சூர்யா, இருவரும் அமிதாப்பை சந்தித்தனர்
    • மோடி, அமிதாப் இருவரும் கரம் கூப்பி நலம் விசாரித்து கொண்டனர்

    இந்தி திரையுலகின் மெகா ஸ்டாரான 81-வயதான அமிதாப் பச்சனுக்கு சில தினங்களுக்கு முன் கையில் அறுவை சிகிச்சை நடந்தது.

    இத்தகவலை அவரது வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    முன்னணி இந்தி நடிகரான அக்ஷய் குமார் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான சூர்யா இருவரையும் சந்தித்து உரையாடிய புகைப்படங்களை அப்போது அவர் வெளியிட்டார். அதில் அவரது வலக்கர மணிக்கட்டு பகுதியில் "பிரேஸ்" அணிந்திருந்தார்.

    ஆனால், அறுவை சிகிச்சை குறித்து வேறு எந்த தகவலும் வெளியிடவில்லை.

    இன்று உத்தர பிரதேச அயோத்தியா நகரில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமருக்கு கட்டப்பட்டு வந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

    இந்தியாவின் முன்னணி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் என பல பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

    திரையுலக பிரபலங்களில் அமிதாப் முதலில் வந்திருந்தார்.

    கும்பாபிஷேகம் முடிந்ததும் திருக்கோவிலை விட்டு வெளியே வந்த பிரதமர் மோடி, அங்கு வந்திருந்த பிரபலங்களுடன் சிறிது நொடிகள் செலவிட்டார்.

    அப்போது மோடி, அமிதாப் பச்சனை கண்டு கரம் கூப்பி வணங்கினார். அதே போல் நடிகர் அமிதாப்பும் கைகூப்பி பிரதமரை வணங்கினார்.

    அப்போது பிரதமர் அமிதாப்பிடம் அவரது கை குறித்து விசாரித்தார்.

    இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    1984ல், அமிதாப் பச்சன், உத்தர பிரதேச பிரயாக்ராஜ் (அப்போதைய அலகாபாத்) தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு வென்று, பாராளுமன்றத்திற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    ×