என் மலர்
நீங்கள் தேடியது "குடற்புழுக்கள்"
- குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும்.
- செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
குடற்புழுக்கள் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகள் மற்றும் கைகளை சரியாக கழுவாததால் ஏற்படுகின்றன. மண், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் நுழைந்து குடலில் வாழத்தொடங்குகின்றன. இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, எடையிழப்பு, ஆசனவாயில் அரிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.
குடற்புழுக்கள் வராமல் தடுக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். நகங்களை நன்றாக வெட்ட வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பிறகும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். பல் துலக்கும் முன்பும், பின்பும் பிரஸை கழுவ வேண்டும். டவல்கள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும். சமையலறை மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். செல்லப்பிராணிகளின் கழிவுகள் அருகே குழந்தைகளை விளையாட விடக்கூடாது. நோய்த்தொற்றுகள் அதிகம் வாய்ப்புள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் வாங்கக் கூடாது. அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது
- குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
- உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.
வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்களைத்தான் குடற்புழு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை நம் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. சில சமயம் பெரியவர்களையும் பாதிக்கிறது.
சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால், நம் குடலில் குடற்புழு உருவாகி பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், அசுத்தமான மண்ணை குழந்தைகள் கையால் அள்ளி விளையாடும்போதும், செருப்பில்லாமல் அசுத்தமான இடங்களில் நடக்கும்போது இந்த குடற்புழுக்கள் உடலை வந்தடைகிறது.
புழுக்கள் பலவகைப்படும். அவை உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு என்று பல வகைப்படும். இந்த புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.
இயற்கை வழிமுறைகள்:
1. தினமும் கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.
2. தினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.
3. ஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.
4. குடற்புழுக்களால் பிரச்சினை ஏற்பட்டால் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு வெளியேறும்.
5. சூடான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் வந்தால் குடற்புழுக்கள் மலம் மூலம் வெளியேறும்.
6. தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.
7. எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.






