என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிருடன் எரித்தல்"

    • கணவர் தற்கொலைக்கு நிர்மலாவே காரணம் என சுரேஷ் கூறி வந்தார்
    • மளமளவென பரவிய தீயால் உடல் வெந்து அங்கேயே நிர்மலா உயிரிழந்தார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ரட்லம் (Ratlam) மாவட்டம்.

    ரட்லம் மாவட்டத்தில் தோதர் (Dhodhar) கிராமத்தில் தனது கணவர் பிரகாஷுடன் வசித்து வந்தவர் நிர்மலா (33). இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சில தினங்களுக்கு முன் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நிர்மலாதான் காரணம் என பிரகாஷின் மூத்த சகோதரர் சுரேஷ் (40) குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் நேற்று சுரேஷ், நிர்மலா வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் மோதலாக மாறிய போது ஆத்திரமடைந்த சுரேஷ், அருகிலிருந்த ஒரு இரும்பு கம்பியால் நிர்மலாவை தாக்கினார். இதில் நிர்மலா நிலைதடுமாறி விழுந்தார். அவர் மீது சுரேஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    மளமளவென பரவிய தீயால் உடல் வெந்து அங்கேயே துடிதுடித்து நிர்மலா உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தில் தங்கள் தாயார் பலியாவதை நிர்மலாவின் குழந்தைகள் கண்டனர்.

    இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்களின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சுரேஷை காவலில் எடுத்தனர்.

    குற்றத்தை ஒப்பு கொண்ட சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் லோதா தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ×